பணியில் இருந்த போலீசாருக்கு மிரட்டல்..!
ராமநாதபுரத்தில் பணியில் இருந்த போலீசாரை மிரட்டிய நகராட்சி ஊழியரின் வீடியோ இணையத்தில் பரவி வருகிறது. கரிகாலன் என்ற காவலர் மருத்துவமனை அருகே பணியில் இருந்த நிலையில் அரசு ஊழியர் ஒருவர் செல்போனில் சத்தமாக பேசியுள்ளார்.
மருத்துவமனை என்பதால் சற்று தள்ளிச் சென்று பேசுமாறு கரிகாலன் கூறவே கோபமடைந்த அவர் ஆவேசத்துடன் இருக்கும் காட்சி இணையத்தில் பரவி வருகிறது. இந்த வீடியோவின் அடிப்படையில் நகராட்சி ஊழியரை போலீசார் தேடி வருகின்றனர்.
📱 Share on WhatsApp 𝕏 Share on X





