கல்லால் அடித்து கொல்லப்பட்ட பள்ளி மாணவி..!
நைஜீரியாவில் சக மாணவர்களால் பள்ளி மாணவி கல்லால் அடித்து தீவைத்து கொளுத்தி கொடூரமாக கொல்லப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. வடகிழக்கு பகுதியில் உள்ள சோடா மாகாணத்தில் உள்ள பள்ளிக்கூடத்தில் மாணவ மாணவிகள் வாட்ஸ்அப் குழுவில் மாணவி ஒருவர் குறிப்பிட்ட ஒரு பிரிவை இழிவுபடுத்தும் வகையிலான கருத்துக்களை பகிர்ந்ததாக கூறப்படுகிறது.
இதனால் ஆத்திரம் அடைந்த அதே பிரிவை சேர்ந்த சக மாணவர்கள் அந்த மாணவியை கற்பழித்து கொடூரமாக கொலை செய்துள்ளனர். தகவல் அறிந்த காவல்துறை அதிகாரிகள் கண்ணீர் புகை குண்டுகளை வீசியும் தடியடி நடத்தியும் மாணவர்களை விரட்டியடித்தனர்.
பள்ளி மாணவியை சக மாணவர்கள் அடித்துக் கொன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
📱 Share on WhatsApp 𝕏 Share on X





