--- --:--:-- --

சீனாவில் இந்திய மாணவர்கள் படிப்பைத் தொடர அனுமதி..!

1

ரண்டு ஆண்டுகளுக்கு பிறகு இந்திய மாணவர்கள் சீனாவில் படிப்பைத் தொடர அனுமதிக்கப்பட்டிருப்பதாக சீன வெளியுறவுத் துறை தெரிவித்துள்ளது. கொரொனா பரவல் காரணமாக சீனாவில் இருந்து வெளியேறிய மாணவர்களுக்கு மீண்டும் சீனா செல்வதற்கு அந்நாட்டு அரசு அனுமதி வழங்கவில்லை.

 

இதனால் ஆன்லைன் வாயிலாக மாணவர்கள் மருத்துவ கல்வி பயின்று வருகின்றனர். ஆன்லைன் மூலமாக படித்தால் செல்லாது என இந்திய மருத்துவக் கவுன்சில் அறிவித்த நிலையில் மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் சீன வெளியுறவுத்துறை அமைச்சருடன் பேச்சுவார்த்தை நடத்தினார்.

 

இதையடுத்து இந்திய மாணவர்கள் மீண்டும் சீனா சென்று தங்கள் படிப்பைத் தொடர அந்த நாட்டு அரசு அனுமதி வழங்கியுள்ளது. மேலும் இந்திய மாணவர்கள் விதிமுறைகளை வரைமுறையின்றி முழுமையாக கடைபிடிக்க வேண்டும் என்று சீனாவில் உள்ள இந்திய தூதரகம் தெரிவித்துள்ளது.

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon