ஆற்றில் சிக்கிய நூறு வயதை கடந்த மீன்..!
கனடாவில் பிடிபட்ட பிரம்மாண்ட மீனை ஆராய்ச்சி பணிக்காக மீண்டும் ஆற்றில் விட்டனர். அந்நாட்டின் பிரிட்டிஷ் கொலம்பியாவில் ஓடும் பிரேசில் ஆற்றில் மீன் பிடித்துக் கொண்டிருந்த ஒருவரின் வலையில் இராட்சத மீன் ஒன்று சிக்கியது.
ஆற்றில் ஆழம் குறைந்த இடத்திற்கு படகை இழுத்து கொண்டு வந்து பார்த்துள்ளனர். அதில் சிக்கியிருந்தது பத்தரை அடி நீளமும் சுமார் 300 கிலோ எடையும் கொண்ட ஒரு மீன் என்பது தெரியவந்தது.
இதுகுறித்து தகவல் அறிந்த மீன்வளத் துறையினர் அந்த மீனை ஆராய்ந்த போது அது நூறு வயதை கடந்துள்ளது தெரியவந்தது. இதையடுத்து அந்த மீனின் உடலில் சிறிய சிப்பை பொருத்தி அதனை மீண்டும் ஆற்றில்விட்டனர்.
📱 Share on WhatsApp 𝕏 Share on X




