நடிகையின் வீட்டிற்குள் புகுந்து கத்தி முனையில் கொள்ளை..!
வளசரவாக்கத்தில் துணை நடிகையை கத்தியை காட்டி மிரட்டி நகை பணம் பறித்த கும்பலை போலீசார் கைது செய்துள்ளனர். விஜயலட்சுமி என்னும் சினிமா துணை நடிகையின் வீட்டிற்குள் புகுந்த மர்ம நபர்கள் நகை மற்றும் பணத்தை கொள்ளையடித்து சென்றுள்ளனர்.
இதுதொடர்பான அதே பகுதியை சேர்ந்த செல்வகுமார் மற்றும் கண்ணதாசன் ஆகிய 2 பேரை போலீசார் கைது செய்தனர். மேற்கொள்ளப்பட்ட விசாரணையில் நடிகையிடம் கத்தியை காட்டி மிரட்டி அவரை கற்பழித்துவிட்டு நகை, பணத்தை திருடியது தெரியவந்தது.
📱 Share on WhatsApp 𝕏 Share on X





