பொது இடங்களில் முகக்கவசம் கட்டாயம் இல்லை..!
அமெரிக்காவில் 11 மாகாணங்களில் பொது இடங்களில் முககவசம் கட்டாயமில்லை என அறிவிக்கப்பட்டுள்ளது. கொரொனா பரவலை தடுக்க உலக சுகாதார அமைப்பின் அறிவுறுத்தலின்படி முகக் கவசம் அணிதல், சமூக இடைவெளியை பின்பற்றுதல் உள்ளிட்ட கட்டுப்பாடுகள் உலகம் முழுவதும் பின்பற்றப்பட்டு வருகின்றன.
இந்த வழிகாட்டு நெறிமுறைகளை பொதுமக்கள் பொது இடங்களில் கட்டாயம் பின்பற்ற வேண்டிய அவசியமில்லை என அந்த நாடுகளும் உத்தரவுகளை பிறப்பித்துள்ளனர். வாஷிங்டன் உள்ளிட்ட 11 மாகாணங்களில் கட்டாயமாக உத்தரவைத் திரும்பப் பெறப்பட்டுள்ளது.
பெரும்பாலான மக்கள் தடுப்பூசி செலுத்திக் கொண்டுள்ளதாகவும் மாகாண அரசுகள் தெரிவித்துள்ளனர். அதேசமயம் மருத்துவமனைகள் பள்ளி வளாகங்களில் மேலும் சில நாட்களுக்கு கட்டாயம் முக கவசம் அணிந்து செல்ல வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
📱 Share on WhatsApp 𝕏 Share on X





