--- --:--:-- --

தனுஷ் பட ஹீரோயினை திட்டி தீர்க்கும் நெட்டிசன்கள்!

12

பாலிவுட்டில் முன்னணி நடிகைகளில் ஒருவராக இருக்கிறார் நடிகை சாரா அலி கான். அவர் கடைசியாக தனுஷ் ஜோடியாக அத்ராங்கி ரே என்ற படத்தில் நடித்திருந்தார். இந்தப் படம் நேரடியாக ஓடிடி இணையதளத்தில் வெளிவந்து நல்ல வரவேற்பை பெற்றது.

 

சமூக வலைத்தளங்களில் எப்போதும் ஆக்டிவாக இருக்கும் சாரா அலி கான் தற்போது வெளியிட்ட ஒரு வீடியோ அவருக்கே பாதகமாக அமைந்திருக்கிறது. இன்ஸ்டாகிராமில் ரசிகர்களின் கேள்விக்கு பதில் அளித்த அவர் ‘நீங்கள் கடைசியாக செய்த பிரான்க் என்ன?’ என்ற கேள்விக்கு ஒரு வீடியோ வெளியிட்டார்.

 

தனது உதவியாளருடன் நீச்சல் குளம் அருகில் போட்டோ எடுத்துக்கொண்டு அதற்கு பிறகு அவரை பிடித்து தண்ணீரில் தள்ளி விட்டு விடுகிறார் அவர். இது மிகவும் கொடூரமான செயல் என நெட்டிசன்கள் சாரா அலி கானை ட்ரோல் செய்து வருகின்றனர்.

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon