வாடகை தாய் மூலம் பிரீத்திக்கு கிடைத்த இரட்டை குழந்தை..!
இந்தி நடிகை பிரீத்தி ஜிந்தா வாடகைத் தாய் மூலம் இரட்டை குழந்தைகளை பெற்றுள்ளார். ஹிந்தியில் முன்னணி கதாநாயகர்களின் படங்களில் நடித்து புகழ்பெற்றவர் பிரீத்தி ஜிந்தா. இவர் தமிழில் மணிரத்னம் இயக்கிய உயிரே படத்தில் நடித்திருந்தார்.
வாடகைத் தாய் மூலம் இரட்டை குழந்தைகளை பெற்றுள்ளார். இதுகுறித்து அவர் இன்று அற்புதமான செய்தியை நான் அனைவரிடமும் பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன்.
எங்களது இரட்டையர்களின் குடும்பத்தில் மகிழ்ச்சி இருப்பதாகவும் இதற்காக டாக்டர்கள் மற்றும் வாடகை தாய்க்கு நன்றி தெரிவிப்பதாக தெரிவித்துள்ளார்.






