செய்தியாளர்கள் முன் கதறி அழுத சந்திரபாபு நாயுடு..!
ஆந்திராவில் ஆளும் ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சியினர் தன்னைப் பற்றியும் தனது குடும்பத்தினர் பற்றியும் அவதூறாக பேசுவதாக கூறி சட்டப்பேரவையில் வெளிநடப்பு செய்த சந்திரபாபு நாயுடு செய்தியாளர்கள் சந்திப்பின்போது கதறி அழுதார்.
அந்த மாநிலத்தில் சட்டமன்ற கூட்டத் தொடர் நடைபெற்று வரும் நிலையில் இன்று ஆந்திர முன்னாள் முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு பற்றி ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சியினர் அவதூறாக பேசியதாக கூறப்படுகிறது.
இதனால் ஆத்திரமடைந்த சந்திரபாபு நாயுடு தான் மீண்டும் ஆட்சியதிகாரத்தை பிடித்து முதலமைச்சர் ஆன பிறகே சட்டப்பேரவைக்குள் நுழைவேன் என தெரிவித்து அங்கிருந்து வெளியேறினார்.






