உயிரை ஈந்து போராடிய விவசாயிகளுக்கு கிடைத்த வெற்றி : நடிகர் கார்த்தி
வேளாண் சட்டங்களை திரும்பப்பெறும் பிரதமர் மோடியின் அறிவிப்பு உயிரைக் கொடுத்துப் போராடிய எளிய வேளாண் மக்களுக்கு கிடைத்த வெற்றி என நடிகர் கார்த்தி தெரிவித்திருக்கிறார்.
இது தொடர்பாக தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள அவர் மக்களின் ஓராண்டு இடைவிடாத போராட்டத்திற்கு கிடைத்த வரலாற்று வெற்றி என குறிப்பிட்டுள்ளார். போராடியவர்களுக்கும், புரிந்துகொண்ட அரசுக்கும் அன்பும் நன்றியும் என நடிகர் கார்த்தி பதிவிட்டுள்ளார்.






