மாணவியின் அடையாளத்தை வெளியிட்டதாக 48 யூ டியூப் சேனல்கள் மீது போக்சோ வழக்கு..!
கோவையில் பாலியல் தொந்தரவு காரணமாக தற்கொலை செய்து கொண்ட பள்ளி மாணவியின் அடையாளத்தை வெளியிட்டதாக 48 யூடியூப் சேனல்கள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
கோவையில் தனியார் பள்ளியில் பிளஸ் 2 படித்து வந்த 17 வயது மாணவிக்கு பள்ளி ஆசிரியர் மிதுன் சக்கரவர்த்தி பாலியல் தொல்லை கொடுத்ததால் அந்த பள்ளியில் இருந்து விலகி வேறு பள்ளியில் சேர்ந்தார். இந்த நிலையில் மாணவி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.
போலீசார் மிதுன் சக்கரவர்த்தி மற்றும் பள்ளி முதல்வர் மீரா ஜாக்சனை கைது செய்தனர். இந்த நிலையில் மாணவியின் அடையாளத்தை 48 யூடியூப் சேனல்கள் வெளியிட்டதாக தெரிகிறது. இதையடுத்து அந்த நாற்பத்தி எட்டு யூடியூப் சேனல்கள் மீதும் வழக்கு பதிவு செய்யப்பட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.






