குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி இன்று உருவாகும்..!
தெற்கு வங்க கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி இன்று உருவாகும் என்றும் சென்னையில் நாளை முதல் இரண்டு நாட்களாக கனமழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
கடலில் உருவாகும் புதிய குறைந்த காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி அடுத்த 24 மணி நேரத்தில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்று வடமேற்கு திசையில் நகரும் என்று கூறப்பட்டுள்ளது.
அதன் காரணமாக நெல்லை, தென்காசி, தேனி, திண்டுக்கல், நீலகிரி, கோவை ஆகிய மாவட்டங்களில் இன்று மிக கனமழைக்கு வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
தூத்துக்குடி, ராமநாதபுரம், மதுரை, கடலூர், புதுக்கோட்டை, புதுச்சேரி மற்றும் காரைக்காலில் கனமழை பெய்யக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. சென்னையிலும் நகரின் ஒரு சில இடங்களில் மிதமான மழை பெய்யும் என ஓரிரு இடங்களில் கனமழை பெய்யும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.






