சிவகங்கையில் துப்புரவு பணியாளராக பணிபுரிந்த பெண்ணுக்கு பாலியல் தொல்லை..!

Publish by: அருண் --- Photo :


சிவகங்கையில் முன்னாள் படை வீரர்களுக்கான பல்நோக்கு மருத்துவமனை ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்த மருத்துவமனையில் பொறுப்பு அதிகாரி கர்னல் துரைசிங்கம் என்பவர் பணி செய்து வருகிறார்.

 

இவர் மருத்துவமனையில் துப்புரவு பணியாளராக வேலை செய்யும் (35வயது) பெண்ணை பாலியல் தொல்லை கொடுத்து வருகிறார். அந்த பெண்ணுக்கு இரண்டு குழந்தைகள் உள்ளனர். கணவர் இல்லை அவர்கள் வசித்து வரும் பகுதி சிவகங்கை காமராஜர் காலணியில் உள்ளனர்.

 

இந்த மருத்துவமனையில் பொறுப்பு அதிகாரி துரைசிங்கம் எனக்கு பாலியல் தொந்தரவு கொடுத்து வருகிறார். எனக்கு கணவர் இல்லாததை அறிந்து இவ்வாறு செய்து வருகிறார். இது தொடர்பாக பெரிய அதிகாரி இருக்கும் திருச்சி ஆபிச்சுக்கும் புகார் செய்திருக்கிறேன். இதன் பின்பு சிவகங்கை நகர் காவல் நிலைய ஏட்டயா ஒருவர் விசாரணைக்கு வந்தார். .என்னை அழைத்து பெரிய ஆபிசர்கள் அப்படி இப்படி தான் இருப்பார்கள் அவர்களை நீ அட்ஜஸ்ட் பண்ணி போக வேண்டியது தானே என்று காவல்துறை பணியில் இருப்பவர் கூறியது எனக்கு மிகுந்த வேதனையே அளிக்கிறது.எனக்கு பாலியல் தொல்லை கொடுத்து வருபவர்கள் என்னை பணிநீக்கம் செய்வார்கள் என் இரு குழந்தைகளையும் காப்பாற்ற என்னை பணியில் இருந்து பாதுகாக்கவும் தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கேட்டுகொள்கிறேன் . இவ்வாறு அவர் கூறினார்.

 


Leave a Reply