--- --:--:-- --

தாய்க்கு கொரொனா இல்லாத நிலையில் பிறந்த குழந்தைக்கு கொரொனா பாசிடிவ்..!

11

வாரணாசியில் தாய்க்கு கொரொனா இல்லாத நிலையில் அவருக்கு பிறந்த குழந்தைக்கு கொரொனா தொற்றிருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.

 

உத்திரபிரதேச மாநிலம் வாரணாசியில் உள்ள தனியார் மருத்துவமனையில் கடந்த 24ஆம் தேதி பிரசவத்திற்காக வந்த பெண்ணுக்கு கொரொனா பரிசோதனை செய்யப்பட்டது. அப்போது அவருக்கு நெகட்டிவ் என முடிவு வந்தது.

 

மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவருக்கு பெண் குழந்தை பிறந்தது கொரொனா பரிசோதனை செய்யப்பட்டது. அதில் பாசிடிவ் என முடிவு வந்தது. தாய்க்கு கொரோனா இல்லாத நிலையில் அவர் பிரசவித்த குழந்தைக்கு கொரோனா இருப்பது மருத்துவர்களையும் அதிர்ச்சி அடைய செய்துள்ளது.

 

தாயும், சேயும் நலமுடன் இருப்பதாக தெரிவித்த மருத்துவர்கள் குழந்தைக்கு மீண்டும் பரிசோதனை செய்யப்படும் என தெரிவித்தனர்.

📱 Share on WhatsApp 𝕏 Share on X

Leave a Reply

Right Menu Icon