--- --:--:-- --

தமிழகத்தில் புதிதாக 34,875 பேருக்கு கொரோனா தொற்று உறுதி..! இன்று 23,863 பேர் டிஸ்சார்ஜ்

AFP_8Q66GZ.jpg

AFP_8Q66GZ.jpg

தமிழகத்தில் தற்போது 2,53,576 பேர் கொரோனாவிற்கு சிகிச்சை பெற்று வருவதாக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

 

தமிழகத்தில் இன்று 34,875 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் மாநிலத்தில் கொரோனா உறுதி செய்யப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 16 லட்சத்து 99 ஆயிரத்து 225 ஆக அதிகரித்துள்ளது. சென்னையில் இன்று மேலும் 6,297 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

 

கொரோனா வைரஸ் பரவியவர்களில் இன்று ஒரே நாளில் 23,863 பேர் சிகிச்சைக்கு பின் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். இதனால் தமிழகத்தில் கொரோனாவில் இருந்து குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 14, லட்சத்து 26 ஆயிரத்து 915 ஆக உயர்ந்துள்ளது.

 

ஆனாலும் கொரோனா வைரஸ் தாக்குதலுக்கு இன்று ஒரே நாளில் 365 பேர் உயிரிழந்துள்ளனர். இதனால் தமிழகத்தில் வைரஸ் தாக்குதலுக்கு பலியானோர் எண்ணிக்கை18 ஆயிரத்து 734 ஆக அதிகரித்துள்ளது.

📱 Share on WhatsApp 𝕏 Share on X

Leave a Reply

Right Menu Icon