திருப்பூர் வடக்கு தொகுதி 3 வது சுற்று முடிவில் அதிமுக முன்னிலை..!
3 வது சுற்று :
திருப்பூர் வடக்கு தொகுதி 3 வது சுற்று முடிவுகள் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. திருப்பூர் வடக்கு தொகுதி அதிமுக வேட்பாளர் விஜயகுமார் 13184 வாக்குகள் பெற்ற வாக்குகள் முன்னிலையில் இருக்கிறார். இவருக்கு அடுத்தபடியாக திமுக கூட்டணியின் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளர் ரவி 6421 வாக்குகள் பெற்று இரண்டாம் இடத்தைப் பெற்றுள்ளார். அதேபோல் நாம் தமிழர் கட்சி ஈஸ்வரன் 1843 ஓட்டுகளும் பெற்றுள்ளார்.
தாராபுரம் பாஜக வேட்பாளர் முருகன் 11847 வாக்குகள் பெற்று முன்னணியில் உள்ளார். திமுக வேட்பாளர் கயல்விழி 10168 வாக்குகள் பெற்று இரண்டாம் இடத்தில் உள்ளார்.
பல்லடம் தொகுதியில் அதிமுக வேட்பாளர் எம்.எஸ்.எம் ஆனந்தன் 11830 வாக்குகள் பெற்று முதலிடத்தில் உள்ளார். இவரையடுத்து திமுக வேட்பாளர் முத்துரத்தினம் 6617 வாக்குகள் பெற்று இரண்டாம் இடத்தில் உள்ளார்.
உடுமலை தொகுதியின் 3 வது ரவுண்டில் அதிமுக வேட்பாளர் உடுமலை ராதாகிருஷ்ணன் 11643 வாக்குகள் பெற்று முதலிடத்தை பெற்றுள்ளார். திமுக வேட்பாளர் தென்னரசு 3872 வாக்குகள் பின்தங்கி 7771 வாக்குகள் பெற்று இரண்டாம் இடத்தில் உள்ளார்.
திருப்பூர் தெற்கு தொகுதி 3 வது ரவுண்டில் செல்வராஜ் 7 191 வாக்குகள் பெற்று முதலிடத்தில் உள்ளார். அதிமுக வேட்பாளர் குணசேகரன் 641 ஓட்டுகள் பின்தங்கி 6550 வாக்குகள் பெற்று 2ம் இடத்தில் உள்ளார்.
அவிநாசி தொகுதியின் 3 வது ரவுண்டில் அதிமுக வேட்பாளர் தனபால் தனபால் 12262 வாக்குகள் பெற்று முன்னணியில் உள்ளார். திமுக கூட்டணியின் ஆதித்தமிழர் பேரவை வேட்பாளர் அதியமான் ராஜு 7585 வாக்குகள் பெற்று இரண்டாம் இடத்திலும் உள்ளார்.
📱 Share on WhatsApp 𝕏 Share on X





