முன்னாள் சிறப்பு டிஜிபி மீதான பாலியல் துன்புறுத்தல் வழக்கை சென்னை உயர்நீதிமன்றம் நேரடியாக கண்காணிக்கும்..!
முன்னாள் சிறப்பு டிஜிபி ராஜேஷ் தாஸ் மீதான பாலியல் துன்புறுத்தல் வழக்கை சென்னை உயர்நீதிமன்றம் நேரடியாக கண்காணிக்கும் என நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் தெரிவித்துள்ளார். ஐபிஎஸ் அதிகாரிக்கு பாலியல் தொல்லை அளித்ததாக சிறப்பு டிஜிபியாக இருந்த ராஜேஷ் தாஸ் மீது புகார் எழுந்தது.
இதனால் அவர் கட்டாயக் காத்திருப்பு பட்டியலில் வைக்கப்பட்டதையடுத்து பாலியல் புகார் சிபிசிஐடிக்கு மாற்றப்பட்டது. நீதிமன்ற நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் தாமாக முன்வந்து விசாரணைக்கு எடுத்துள்ளார். இது குறித்து வருத்தம் தெரிவித்தவரை ஐபிஎஸ் அதிகாரி ஒருவரே புகார் கொடுக்கிறார் என்றால் சாதாரண பெண்களின் நிலை எப்படி இருக்கும் என கேள்வி எழுப்பியுள்ளார்.
விசாரணை தொடர்பாக குறிப்பிட்ட கால இடைவெளியில் சிபிசிஐடி அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என உத்தரவிட்ட நீதிபதி இந்த விவகாரத்தை அரசியலாக்க வேண்டாம் என்று அரசியல் கட்சிகளை கேட்டுக்கொண்டுள்ளார்.
பாதிக்கப்பட்ட பெண் அதிகாரியின் பெயரை யாரும் வெளியிடக்கூடாது என்று உத்தரவிட்டு வழக்கை தலைமை நீதிபதி அமர்வு பரிந்துரைத்துள்ளார்.






