--- --:--:-- --

உலகம் முழுவதும் திடீரென முடங்கிய யூடுயூப், ஜிமெயில்..!

11

கூகுள் நிறுவனத்தின் யூடியூப் ஜிமெயில் கூகுள் டாக்ஸ் உள்ளிட்ட சேவைகள் சில நிமிடங்கள் முடங்கியதால் உலகம் முழுவதும் பயனாளர்கள் கடும் அவதி அடைந்தனர்.

 

மாலை 5 மணி அளவில் இணையதளம் மற்றும் சேவைகளை பயன்படுத்த முடியாத நிலை ஏற்பட்டதால் இந்தியா உட்பட பல்வேறு நாடுகளிலும் தனிநபர்களும், நிறுவனங்களும் பரிதவிக்க நேரிட்டது. இதனை நெட்டிசன்கள் மீம்ஸ் மூலம் கேலி செய்தனர்.

 

யூடியூப் நிறுவனத்தின் அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் என்ன பிரச்சினை என்று ஆய்வு செய்து வருவதாக விளக்கம் அளிக்கப்பட்டது. சில நிமிடங்களுக்குப் பின் மீண்டும் வழக்கம்போல் அனைத்து சேவைகளும் இயங்கியதால் பயனாளர்கள் நிம்மதியடைந்தனர்.

📱 Share on WhatsApp 𝕏 Share on X

Leave a Reply

Right Menu Icon