தற்கொலைக்கு தூண்டியதாக சித்ராவின் கணவர் ஹேம்நாத் அதிரடி கைது..!
சின்னத்திரை நடிகை சித்ரா கடந்த 9ஆம் தேதி நசரத்பேட்டை அருகே விடுதியில் சடலமாக மீட்கப்பட்டார். பிரேத பரிசோதனையில் அவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டது உறுதி செய்யப்பட்டது.
இதைதொடர்ந்து உடனிருந்த கணவன், வில்லா ஊழியர்கள் படப்பிடிப்பில் பங்கேற்றவர்கள், பெற்றோர், மாமனார் என பல தரப்பினரிடமும் சித்ரா தொலைபேசியில் தொடர்பு கொண்டு அவர்களிடமும் விசாரணை நடைபெற்றது. தன் மகளை அடித்துக் கொன்றதாக சித்ராவின் தாயார் புகார் தெரிவித்திருந்தார்.
இந்த நிலையில் விசாரணையில் ஈடுபட்டிருந்த நசரத்பேட்டை போலீசார் அவரை நேற்று இரவு கைது செய்தனர். சித்ராவை தற்கொலைக்கு தூண்டியதாக அவரை கைது செய்தவர்கள் அவர் மீது 306 பிரிவின் கீழ் வழக்கு பதிவு செய்து பூந்தமல்லி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி பொன்னேரி கிளை சிறையில் அடைத்தனர்.
இதனிடையே திருமணமாகி சில மாதங்களிலேயே சித்ரா உயிரிழந்ததால் ஆர்டிஓ விசாரணைக்கு உத்தரவிடப்பட்டது. அதன்படி ஸ்ரீபெரும்புதூர் கோட்டாட்சியர் திவ்யஸ்ரீ விசாரணையை தொடங்கினார். நடிகை சித்ராவின் தந்தை காமராஜ், தாயார் விஜயா அண்ணன் சரவணன், சகோதரி சரஸ்வதி ஆகியோரிடம் விசாரணை நடத்தினார்.






