கேம் விளையாடி 11 லட்சம் ரூபாயை செலவிட்ட 6 வயது சிறுவன்..!
அமெரிக்காவில் 6 வயது சிறுவன் ஒருவன் ஆப்பிள் ஐபேடில் கேம் விளையாடி அதில் 11 லட்சம் ரூபாயை செலவிட்டுள்ளார். வெல்டனை சேர்ந்த ஜெசிக்கா என்பவர் தனது கணக்கில் இருந்து கடந்த ஆறு மாதங்களாக ஆப்பிள் நிறுவனத்தின் கணக்கிற்கு லட்சக்கணக்கில் பணம் சென்றதை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.
இதுகுறித்து அவர் புகார் தெரிவித்தபோது அவரது 6 வயது மகனான ஜார்ஜ் ஐபேடிலுள்ள சோனிக் போர்ஸிஸ் என்ற கேமை விளையாடியதும் அதில் வழங்கப்படும் காய்ன்ஸை பெறுவதற்காக கிரெடிட் கார்டை பயன்படுத்தி பணத்தை செலவிட்டதும் தெரியவந்தது.






