கந்துவட்டி கொடுமையால் குடும்பத்துடன் தற்கொலை செய்து கொண்ட தொழிலாளி..!
விழுப்புரம் மாவட்டம் வளவனூர் அருகே கந்துவட்டி கொடுமையால் தச்சு தொழிலாளி குடும்பத்துடன் தற்கொலை செய்து கொண்டார். புதுப்பாளையம் கிராமத்தை சேர்ந்த மோகன் மரப்பட்டறை நடத்திவந்தார். அதற்காக கந்து வட்டிக்கு கடன் வாங்கி இருந்ததாக கூறப்படுகிறது.
அதனை திருப்பி செலுத்த முடியாமல் மோகன் அவதிப்பட்டு வந்துள்ளார். இந்நிலையில் இன்று காலை நீண்ட நேரமாகியும் மோகன் வீடு திறக்கப்படாததால் சந்தேகம் அடைந்த அக்கம் பக்கத்தினர் கதவை உடைத்து உள்ளே சென்றனர்.
அப்போது மோகன், அவரது மனைவி விக்னேஸ்வரி மற்றும் 3 குழந்தைகள் தூக்கிட்ட நிலையில் கடந்துள்ளனர். நிகழ்விடத்திற்கு வந்த காவல்துறையினர் உடல்களை மீட்டு விழுப்புரம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். டிஎஸ்பி நல்லசிவம் நேரில் ஆய்வு நடத்தினார்.
கடந்தாண்டு விழுப்புரத்தில் லாட்டரி சீட்டால் கடனாளியான நகை தொழிலாளி மனைவி மற்றும் மூன்று குழந்தைகளுடன் நஞ்சருந்தி தற்கொலை செய்துகொண்ட நிலையில் அதே போன்றதொரு சம்பவம் நிகழ்ந்திருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.






