--- --:--:-- --

10 கோடியே 10 லட்சம் ரூபாய் அபராதத் தொகை செலுத்திய சசிகலா..!

4

சொத்துக்குவிப்பு வழக்கில் விதிக்கப்பட்ட 10 கோடியே 10 லட்சம் ரூபாய் அபராதத் தொகையை பெங்களூரு தனி நீதிமன்றத்தில் சசிகலா செலுத்தியுள்ளார்.

 

இந்த வழக்கில் சசிகலாவுக்கு 4 ஆண்டுகள் சிறை தண்டனையும், 10 கோடியே 10 லட்சம் ரூபாய் அபராதமும் விதிக்கப்பட்டு இருந்தது. இதையடுத்து கடந்த 2017 பிப்ரவரி 15ஆம் தேதி முதல் சசிகலா பெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறையில் அடைக்கப்பட்டார்.

 

கடந்த 44 மாதங்களாக சிறையில் இருக்கும் நிலையில் அவரது சார்பில் அபராத தொகைக்கான வங்கி வரைவோலையை வழக்கறிஞர் முத்துக்குமார் பெங்களூரு தனி நீதிமன்றத்தில் நீதிபதி சிவப்பாவிடம் நேற்று மாலை செலுத்தியுள்ளார்.

 

இதன்மூலம் தண்டனை முடிந்து வரும் ஜனவரி இறுதியில் சசிகலா சிறையில் இருந்து வெளியே வருவதற்கான சூழல் உருவாகியுள்ளது.

📱 Share on WhatsApp 𝕏 Share on X

Leave a Reply

Right Menu Icon