--- --:--:-- --

நடிகை குஷ்பு சென்ற கார் கண்டெய்னர் லாரி மீது மோதி விபத்து..!

5

செங்கல்பட்டு மாவட்டத்தில் நடிகை குஷ்பு சென்ற கார் கண்டெய்னர் லாரி மீது மோதி விபத்து ஏற்பட்டுள்ளது. பாஜகவை சேர்ந்த குஷ்பு தனது காரில் யாத்திரைக்காக கடலூர் நோக்கி மதுராந்தகம் அருகே சென்று கொண்டு இருந்தார்.

 

அப்போது முன்னால் சென்ற கண்டெய்னர் லாரி குஷ்பூ சென்ற கார் மீது திடீரென மோதியது. இதில் காரின் பின்கதவு மட்டும் சேதமடைந்துள்ளதாகவும் குஷ்புவுக்கு காயம் எதுவும் ஏற்படவில்லை எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

இது குறித்து பேசிய குஷ்பு கண்டெய்னர் லாரி மீது மோதியதில் யாருக்கும் எந்த காயமும் ஏற்படவில்லை. இந்த விபத்து குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

📱 Share on WhatsApp 𝕏 Share on X

Leave a Reply

Right Menu Icon