--- --:--:-- --

பள்ளிகள் திறப்பு குறித்த முடிவை முதல்வரே அறிவிப்பார்..!

12

தமிழகத்தில் பள்ளிகள் திறப்பு குறித்து தெளிவான முடிவை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவிப்பார் என பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் கூறியுள்ளார். தமிழகத்தில் அக்டோபர் 1ம் தேதி முதல் 10, 11, 12ஆம் வகுப்பு மாணவர்கள் பள்ளிக்கு வரலாம் என அரசாணை வெளியிடப்பட்டு இருந்தது.

 

மேலும் மாணவர்கள் கடைபிடிக்க வேண்டிய வழிகாட்டு நெறிமுறைகளும் வெளியிடப்பட்டன. இதனையடுத்து இந்த விவகாரம் தொடர்பாக விளக்கம் அளித்த பள்ளி கல்வித்துறை அமைச்சர் 10 முதல் 12 ஆம் வகுப்பு வரையிலான மாணவர்கள் விருப்பப்பட்டால் சந்தேகம் கேட்க பள்ளிக்கு செல்லலாம் என தெரிவித்திருந்தார்.

 

ஆனாலும் இந்த விவகாரம் தொடர்பாக குழப்பம் நீடித்த நிலையில் பள்ளி திறப்பு குறித்து முதலமைச்சர் தலைமையில் நடைபெற உள்ள ஆலோசனைக் கூட்டத்திற்குப் பிறகு தெளிவான அறிவிப்பு வெளியிடப்படும் என கோபிசெட்டிபாளையத்தில் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.

📱 Share on WhatsApp 𝕏 Share on X

Leave a Reply

Right Menu Icon