--- --:--:-- --

காஷ்மீரில் லக்‌ஷர்-இ-தொய்பா அமைப்பின் பயங்கரவாதி சுட்டுக்கொலை!

5

காஷ்மீரில் நடைபெற்ற சண்டையில் பாகிஸ்தானிலிருந்து இந்தியாவிற்குள் நுழைந்த லக்‌ஷர்-இ-தொய்பா பயங்கரவாத அமைப்பின் முக முக்கியமான தீவிரவாதி ஹைதர் கொல்லப்பட்டார். இந்த மோதலில் இரு இராணுவ உயரதிகாரிகள் உட்பட ஐந்து பேர் வீரமரணம் அடைந்தனர். ஸ்ரீநகரில் இருந்து 70 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள ஹந்துவாரா பகுதிக்குள் நுழைந்த பயங்கரவாதிகள் அங்குள்ள பொதுமக்களை பணய கைதிகளாக பிடித்து வைத்தனர்.

 

தகவலறிந்து அங்கு விரைந்த ராணுவத்தினரும் ஜம்மு காஷ்மீர் காவல் துறையினரும் குறிப்பிட்ட பகுதியை சுற்றிவளைத்தனர். அப்போது பயங்கரவாதிகளுக்கும் பாதுகாப்புப் படையினருக்கும் இடையே கடும் துப்பாக்கி சண்டை ஏற்பட்டது. இதில் பணயக்கைதிகளாக பிடித்து வைக்கப்பட்டிருந்த பொதுமக்கள் பலர் விடுவிக்கப்பட்டனர்.

சண்டையின்போது பாகிஸ்தானிலிருந்து இந்தியாவிற்கு சட்ட விரோதமாக நுழைந்த லஷ்கர்-இ-தொய்பா பயங்கரவாத அமைப்பின் முக்கிய நபர் ஹைதர் உட்பட 2 பயங்கரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டனர். சண்டையின் போது இரண்டு இராணுவ அதிகாரிகள் உட்பட நான்கு ராணுவத்தினரும், ஜம்மு-காஷ்மீர் காவல்துறை உதவி ஆய்வாளர் ஒருவரும் வீரமரணம் அடைந்தனர்.

 

பயங்கரவாதிகளுடன் நடந்த சண்டையில் பாதுகாப்பு படை வீரர்கள் உயிரிழந்தது மிகுந்த வேதனை அளிப்பதாக பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத்சிங் ட்விட்டரில் பதிவிட்டுள்ளார். ஜம்மு காஷ்மீரில் ஹந்த்வாரா பகுதியில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் நாட்டிற்காக உயிர் தியாகம் செய்த 5 வீரர்களின் குடும்பத்தினருக்கு பிரதமர் நரேந்திர மோடி ஆழ்ந்த இரங்கல் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து ட்விட்டரில் அவர் பதிவு இருக்கும் இரங்கல் செய்தியில் ஹந்த்வாராவில் எதிரிகளிடம் போராடி உயிர்துறந்த நமது வீரர்கள் மற்றும் பாதுகாப்பு படையினரின் வீரத்தை போற்றுவதாக தெரிவித்துள்ளார். வீரர்களின் தியாகத்தையும், வீரத்தையும் இந்த நாடு என்றும் நினைவில் வைத்துக் கொள்ளும் என்றும் முழு அர்ப்பணிப்புடன் நாட்டு மக்களுக்காக சேவையாற்றி குடிமக்களை பாதுகாத்து இருப்பதாக புகழாரம் சூட்டியுள்ளார்.

 

மேலும் உயிரிழந்த வீரர்களின் குடும்பத்தினர் மற்றும் நண்பர்களுக்கு தனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்வதாகவும் பிரதமர் மோடி குறிப்பிட்டுள்ளார்.

📱 Share on WhatsApp 𝕏 Share on X

Leave a Reply

Right Menu Icon