பொது முடக்கத்தை தளர்த்துவதில் புத்திசாலித்தனம் தேவை

Publish by: செய்திப்பிரிவு --- Photo : கோப்புபடம்


கொரொனா பரவலை தடுக்க அமல்படுத்தப்பட்டுள்ள பொது முடக்கத்தை தளர்த்துவதில் புத்திசாலித்தனமாக செயல்பட வேண்டும் என்று ரிசர்வ் வங்கியின் முன்னாள் ஆளுநர் ரகுராம் ராஜன் கூறியுள்ளார். காணொளி வாயிலாக காங்கிரஸ் எம்பி ராகுல் காந்தி நடத்திய ஆலோசனையின் போது அவரிடம் ரகுராம் ராஜன் இவ்வாறு கூறினார். மக்களை எப்போதும் முடக்கத்திலேயே வைத்து இருப்பது எளிது.

 

ஆனால் அது பொருளாதாரத்திற்கு நிலையானதாக இருக்காது என்றும் அவர் தெரிவித்தார். கொரொனா வைரஸ் பரவலை தடுக்கும் விதமாக நாடு முழுவதும் அமல்படுத்த பொது முடக்கத்தால் கடுமையாக பாதிக்கப்பட்ட ஏழைகளுக்கு உதவ 65 ஆயிரம் கோடி ரூபாய் தேவைப்படுவதாகவும் ரகுராம் ராஜன் கூறினார்.

 

பொது முடக்கத்தை தளர்த்துவதில் புத்திசாலித்தனமாக செயல்பட வேண்டும் என்று தெரிவித்திருக்கும் அவர், நீண்ட நாட்களுக்கு உணவளிக்கும் திறன் இந்தியாவுக்கு இல்லாததால் நாம் படிப்படியாக கட்டுப்பாடுகளை தளர்த்த வேண்டும் என்றும் யோசனை தெரிவித்தார்.

 

கட்டுப்பாடுகளை தளர்த்தும் போது யாராவது நோய் தொற்றால் பாதிக்கப்பட்டால் அவர்களை தனிமைப்படுத்த வேண்டும் என்றும் ராகுல் காந்தியிடம் ரகுராம் ராஜன் கூறியுள்ளார்.


Leave a Reply