திருவாடானையில் மின்னல் தாக்கி பத்துக்கும் மேற்பட்ட டிவி மற்றும் மின்சாதன பொருட்கள் சேதம்

Publish by: ஆனந்த் --- Photo :


ராமநாதபுரம் மாவட்டம் திருவாடானை தாலுகா, திருவாடானையில் மதியம் பலத்த மின்னல் இடியுடன் கூடிய மழை பெய்தது. மழை பெய்து கொண்டிருந்த போது மின்னல் அதிக அளவில் இருந்தது. அதில் பண்ணவயல் பகுதியில் மின்னல் தாக்கியதில் ரத்தினம், ஜெயகாந்தன்,ராதிகா, ஜோதி, உள்பட பத்துக்கும் மேற்பட்ட வீடுகளிலிருந்து டிவிகள், நான்கிற்கும் மேற்பட்ட இன்வெர்ட்டர்கள் , மற்றும் மின்சாதன பொருட்களை அரசு கேபிள் டிவி செட்டாப் பாக்ஸ் 30-ம் சேதமடைந்து விட்டது.

 

இதுகுறித்து திருவாடானை ஊராட்சி மன்ற தலைவர் இலக்கியா ராமு, துணைத்தலைவர் மகாலிங்கம் நேரில் பார்வையிட்டு வட்டாட்சியருக்கு தகவல் தெரிவித்தனர். வட்டாட்சியர் உரிய நடவடிக்கை எடுத்து இழப்பீடு கிடைக்க வழிவகை செய்யப்படும் என்று தெரிவித்தார்.


Leave a Reply