கொரோனா சிகிச்சையில் பலன் தந்த ரெம்டிசிவர் மருந்து!

Publish by: செய்திப்பிரிவு --- Photo : கோப்புபடம்


கொரொனா வைரஸ் பாதிப்புகள் முற்றிய நிலையில் உள்ள நோயாளிகளுக்கு ரெம்டிசிவர் என்ற மருந்து நல்ல பலன் தருவதாக நியூ இங்கிலாந்து சோனல் ஆப் மெடிசன் என்ற இதழ் கூறியுள்ளது. இதுகுறித்து ஆய்வு கட்டுரை ஒன்றை அந்த இதழ் வெளியிட்டுள்ளது .

 

கொரொனா முற்றிய நிலையில் உள்ள நோயாளிகளுக்கு இந்த மருந்து தரப்பட்டது மூன்றில் இரண்டு பங்கு பேரின் உடல்நிலை முன்னேற்றம் கொண்டிருப்பதாக அப்பத்திரிகை தெரிவித்துள்ளது. அதேநேரம் குறைந்தளவு நோயாளிகளை பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளதாகவும் உடல்நிலையில் முன்னேற்றம் அடைந்தவர்களை தொடர்ந்து கவனிக்க வேண்டி இருப்பதாகவும் கூறியுள்ளது.

 

இந்நிலையில் மருந்தின் நம்பகத்தன்மை குறித்து இப்போதே கூற முடியாது என்றும் அப்பத்திரிகை கூறியுள்ளது. ஜெலிட் சயின்சஸ் என்ற நிறுவனம் சோதனை செய்ததில் இம்மருந்தை உருவாக்கி நோயாளிகளிடம் அளித்து சோதனை நடத்தியது குறிப்பிடத்தக்கது . இந்த மருந்து குறித்த சோதனைகள் அமெரிக்காவிலும், சீனாவிலும் நடந்து வருகின்றன.


Leave a Reply