கோவை தனியார் கல்லூரியில் கொரோனா வைரஸ் கண்காணிப்பு மையம்..! பணிகள் முழு வீச்சில் தீவிரம் !!!

Publish by: கோவை - விஜயகுமார் --- Photo :


கொரானா வைரஸ் பாதிப்பு இந்தியாவிலும் பீதியை ஏற்படுத்தியுள்ளது. இந்தியாவில் இதுவரை 125 பேருக்கு வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.இந்தியாவில் இதுவரை இவ்வைரஸ் தாக்கத்தினால் 3 பேர் உயிரிழந்துள்ளனர்.

 

தமிழகத்திலும் இதன் தாக்கம் தென்படத் தொடங்கியுள்ளது. அண்டை மாநிலங்களான கேரளா, கர்நாடகாவில் கொரானா பாதிப்புக்கு ஆளானோர் எண்ணிக்கை தினமும் அதிகரித்து வருகிறது. இதனால் தமிழகத்தில் கொரானா தடுப்பு முன்னெச்சரிக்கையாக, தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி பல்வேறு அதிரடி உத்தரவுகளை பிறப்பித்தார்.

 

இதன்படி அனைத்து கல்வி நிறுவனங்கள், தியேட்டர்கள், வணிக வளாகங்கள், பொழுதுபோக்கு இடங்கள், விளையாட்டு அரங்கங்கள், நீச்சல்குளங்கள், சுற்றுலா இடங்கள் என மக்கள் அதிகம் கூடும் இடங்கள் அனைத்தையும் இன்று முதல் மார்ச் 31-ந் தேதி வரை மூட உத்தரவிட்டார். மேலும், பல்வேறு கட்டுப்பாடுகள், அறிவுரைகளையும் வழங்கியிருந்தார்.

 

முதல்வரின் அறிவிப்பைத் தொடர்ந்து, அவற்றை செயல்படுத்துவது பற்றியும், கொரானா முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்தும் அனைத்து மாவட்ட ஆட்சித் தலைவர்கள் மற்றும் சுகாதாரத் துறை அதிகாரிகளுடன் தலைமைச் செயலாளர் சண்முகம் ஆலோசனை நடத்தினார்.சென்னை தலைமைச் செயலகத்தில் இருந்து காணொலி காட்சி மூலம் ஆலோசனை நடத்திய தலைமைச் செயலாளர், தமிழக அரசின் அறிவிப்புகளை கண்டிப்புடன் செயல்படுத்த உத்தரவிட்டு, பல்வேறு ஆலோசனைகளை வழங்கினார்.

மேலும்,விமான நிலையங்களில் வெளிநாட்டில் இருந்து வருபவர்களை கொரோனோ வைரஸ் அறிகுறி உள்ளதா என தீவிர சோதனையும் நடைபெற்று வருகிறது.

 

இந்த நிலையில் கொரோனா வைரஸ் பரவாமல் தடுக்கும் வகையிலும்,பாதிக்கப்பட்டோரை கண்காணிக்கும் விதமாகவும் மாவட்ட வாரியாக கண்காணிப்பு மையங்களை அமைக்க அரசு உத்தரவிட்டுள்ளது.

 

அதன் பேரில் கோவை மாவட்டத்தில் மாவட்ட ஆட்சியர் ராசாமணி உத்தரவின் பேரில் கோவை,திருப்பூர் மாவட்டங்களை இணைக்கும் கருமத்தம்பட்டியில் உள்ள தேஜா சக்தி பொறியியல் கல்லூரியில் கண்காணிப்பு மையம் அமைக்க திட்டமிடப்பட்டு அதற்கான பணிகள் முழு வீச்சில் நடைபெற்று வருகிறது.

 

இந்த நிலையில் கொரோனா வைரஸ் தாக்குதல் உள்ள நபர்கள்,அவர்களிடம் பழக்கமுள்ளவர்கள்,உறவினர்களை தனிமைப்படுத்தி சிகிச்சை அளிக்கும் விதமாக கோவை கருமத்தம்பட்டி அருகே உள்ள தேஜா சக்தி பொறியியல் கல்லூரியில் கண்காணிப்பு மையம் துவக்கப்பட்டுள்ளது.

 

இக்கல்லூரி விடுதியில் 100 படுக்கை வசதிகளுடன் துவக்கப்பட உள்ளது.அதற்காக கட்டில்கள்,மெத்தைகள் உள்ளிட்ட பல்வேறு வசதிகளை செய்யும் பொருட்டு பணிகள் முழு வீச்சில் நடைபெற்று வருகின்றன.

 

இக்கல்லூரியில், கோவைக்கு விமானத்தில் வருபவர்களை தனிமைபடுத்தி கண்காணிக்கப்பட உள்ளது குறிப்பிடத்தக்கது.


Leave a Reply