தமிழகத்தில் முகத்தை மூடிக்கொண்டு யாரும் நடமாடக் கூடாது என்பதை உறுதிப்படுத்துவதற்கான சட்டத்தை அரசு ஏற்ற வேண்டும் என்று முன்னாள் மத்திய அமைச்சர் பொன்ராதாகிருஷ்ணன் வலியுறுத்தியுள்ளார்.
சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர் தமிழகத்தில் சமீபத்தில் நடைபெற்ற கொலை சம்பவங்களுக்கும் பயங்கரவாதிகளை காரணம் எனக் குறிப்பிட்டார். ஹிந்து என்ற உணர்வோடு இந்துக்கள் வாழக்கூடாது என்கிற சூழல் தற்போது தமிழகத்தில் நடந்து வருவதாகவும், இதற்கு திமுக காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் துணை போவதாகவும் அவர் குற்றம்சாட்டினார்.
இலங்கையில் நிகழ்ந்த குண்டு வெடிப்பை அடுத்து அந்நாட்டின் முகத்தை மூடிக் கொண்டு செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்த பொன்ராதாகிருஷ்ணன் அதுபோன்ற தடை தமிழகத்திலும் விதிக்கப்பட வேண்டும் என்றும் வலியுறுத்தினார்.