KFJ நகைக் கடை மீது 500க்கும் மேற்பட்டோர் மோசடி புகார்

சென்னையில் கங்கிய கேரளா பேஷன் ஜுவல்லரியில் பல கோடி ரூபாய் மோசடி தொடர்பாக புகார் அளித்தவர்களின் எண்ணிக்கை 500ஐ தாண்டிவிட்டது. சென்னையில் மயிலாப்பூர், அண்ணா நகர் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் கிளைகள் அமைத்து செயல்பட்ட கேரளா பேஷன் ஜுவல்லரி என்னும் நிறுவனம் நகை மோசடி புகாரால் தற்போது மூடப்பட்டுள்ளது.

 

இந்த நிறுவனம் பல கோடி அளவுக்கு மோசடி செய்துள்ளதால் வழக்கு சென்னை கிண்டியில் உள்ள பொருளாதார குற்றப் பிரிவுக்கு மாற்றப்பட்டு உள்ளது. இந்த வழக்கை பொருளாதார குற்றப்பிரிவு டிஎஸ்பி ஆதிமூலம் விசாரித்து வருகிறார். 8 கோடி ரூபாய் அளவிற்கு மோசடி புகார் வந்துள்ளதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.

 

நகை கடையின் மோசடி தொடர்பாக இதுவரை ஐநூற்றுக்கும் மேற்பட்டோர் புகார் அளித்துள்ளனர். நாளுக்குநாள் புகார்கள் குவிந்து வருவதையடுத்து கேரளா பேஷன் ஜுவல்லரி இயக்குனர் அலுவலகங்களில் போலீசார் சோதனை நடத்தினர். அதைத்தொடர்ந்து அந்த நிறுவனத்தின் இயக்குனர்கள் வழக்கு விசாரணைக்கு ஒத்துழைப்பதாக உறுதியளித்துள்ளனர்.

 

ஆனால் நகை கடையின் மோசடியால் பாதிக்கப்பட்டவர்களோ மோசடி செய்யப்பட்ட நகையும், பணமும் எப்போது கிடைக்கும் என்று தெரியாமல் தவித்து வருகின்றனர்.


Leave a Reply