சாதி சான்றிதழ் கேட்டு ஆட்சியர் அலுவலகத்தில் பாம்பு, கீரிகளுடன் போராட்டம்

திருநெல்வேலி மாவட்டம் தருவையில் சுமார் 50க்கும் மேற்பட்ட காட்டுநாயக்கன் சமூக மக்கள் வசித்து வருகின்றனர். மற்றவர்களைப் போல தங்களது குழந்தைகளுக்கும் வாழ்வில் உயர பள்ளிகளில் சேர்த்துள்ளனர்.

 

ஆனால் அவர்கள் கல்வியைத் தொடர்வதில் சாதிசான்றிதழ் சிக்கல் நீடிக்கிறது. சாதி சான்றிதழுக்காக பல ஆண்டுகளாக போராடி வரும் இந்த மக்கள் திருநெல்வேலி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பாம்பு, கீரிப்பிள்ளைகள் உள்ளிட்ட வன விலங்குகளுடன் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

 

ஜாதி சான்றிதழ் இல்லாத காரணத்தால் தங்களால் உயர்கல்வியை தொடர முடியவில்லை என்று வேதனை தெரிவிக்கும் காட்டுநாயக்கன் சமூக இளைஞர்கள் தங்களது கல்வி பாதியிலேயே விட்டுவிட்டு தங்கள் முன்னோர் செய்த தொழிலை செய்யும் அவல நிலைக்கு தள்ளப்பட்டுள்ளதாக கூறுகின்றனர்.

குறிசொல்லுதல் உள்ளிட்ட தொழில்களை செய்யும் போது காவல்துறை தங்களை களவு செய்வதாக கூறி கடுமையாக தாக்கும் அவலநிலையும் உள்ளதாக வேதனை தெரிவிக்கின்றனர். மற்ற மாவட்டங்களில் உள்ள காட்டுநாயக்கன் சமூக மக்கள் ஜாதி சான்றிதழ் பெற்றிருக்கும் போது திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள மக்களுக்கு மட்டும் இதுவரை ஜாதி சான்றிதழ் கொடுக்கப்பட்டது ஏன் என்று அங்கு வசிக்கும் காட்டுநாயக்கன் சமூக மக்கள் கேள்வி எழுப்பியுள்ளனர்.

 

தங்கள் போராட்டத்திற்கு மதிப்பு கொடுத்து மாவட்ட நிர்வாகம் ஜாதி சான்றிதழ் வழங்கும் என்ற நம்பிக்கையோடு காத்திருக்கின்றனர் இந்த மக்கள்.


Leave a Reply