துக்ளக்கை ஆதாரமாக காட்ட வேண்டியது தானே..? ரஜினிக்கு எதிராக கொதிக்கும் திராவிட இயக்கத்தினர்!!

பெரியார் குறித்து தாம் பேசியதற்கு மன்னிப்போ, வருத்தமோ தெரிவிக்கப்போவதில்லை என நடிகர் ரஜினிகாந்த் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.தாம் பேசியதற்கு ஆதாரமாக 1971-ல் சேலத்தில் நடந்த தி.க.மாநாடு தொடர்பாக 2017-ல் அவுட்லுக் பத்திரிகையில் வெளியான செய்தியை ஆதாரமாக காட்டினார் ரஜினி.

 

அவுட்லுக் செய்தியின் ஜெராக்ஸ் நகலை காட்டி, அந்த செய்தியின் அடிப்படையிலும், தாம் கேள்விப்பட்டதை அடிப்படையாக வைத்து மே தாம் பேசியதாக ரஜினி கூறினார். 1971-ல் சேலத்தில் நடந்தது மறுக்க முடியாதது; ஆனால் மறக்க வேண்டியது என்றும் பஞ்ச் வைத்தார் ரஜினி.

 

இல்லாத ஒன்றை தாம் கற்பனையாக கூற வில்லை என்று தெரிவித்த ரஜினி, தாம் பேசியதை நியாயப்படுத்தி, அதற்கு 2017-ல் வெளியான ஆங்கில நாளேட்டு செய்தியை ஆதாரமாக காட்டியதற்கு பெரியார் இயக்கத்தினர் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். 1971-ல் நடந்த தி.க.மாநாடு தொடர்பாக, ரஜினிக்கு நெருக்கமான துக்ளக் இதழில் அதே ஆண்டில் வெளியாகியுள்ளது. அந்த ஆதாரத்தை காட்டினாலே, 1971-ல் நடந்த மாநாடு தொடர்பான உண்மை தெரியும்.

 

எனவே துக்ளக் இதழில் வெளியானதை ஆதாரமாக ரஜினி காட்டலாமே? அதை மறைத்து 46 வருடங்கள் கழித்து வெளியான ஒரு செய்தியை காட்டினால் நம்பத் தயாரில்லை என பெரியார் திராவிடர் கழகத் தலைவர் கொளத்தூர் மணி .1971-ல் நடந்த அந்த மாநாட்டில் தாமும் பங்கேற்றதாகவும், ரஜினி கூறியது போன்ற சம்பவம் நடைபெறவே இல்லை என்றும் கொளத்தூர் மணி மறுத்துள்ளார்.


Leave a Reply