திருச்சி மாவட்டம் மண்ணச்சநல்லூர் அருகே உறவுக்கார பெண்ணை கழுத்தை அறுத்து கொலை செய்தவர் கைது செய்யப்பட்டார். திருச்செங்கோட்டை அடுத்த ஆணிபழசை சேர்ந்தவர் வெள்ளையம்மாள். திருமணமாகி விவாகரத்து பெற்ற இவர் உறவுக்கார இளைஞர் முத்து என்பவருடன் நெருங்கி பழகியுள்ளார்.
திருமணம் செய்து கொள்வதாக கூறி சிறுக சிறுக ஒரு லட்சத்து 20 ஆயிரம் ரூபாய் மற்றும் ஏழு சவரன் நகைகளை முத்து பெற்றுள்ளார். ஒருகட்டத்தில் திருமணம் செய்ய கட்டாயப்படுத்திய வெள்ளையம்மாள் கடந்த 10ஆம் தேதி வீட்டில் இருந்த 8 சவரன் நகையுடன் முத்துவின் வீட்டிற்கு வந்தார்.
அவரை மண்ணச்சநல்லூர் அருகே உள்ள கொள்ளிடம் ஆற்றுக்கு அழைத்து சென்ற முத்து கழுத்தை அறுத்து கொன்று உடலை புதைத்தார். இது குறித்த புகாரின் பேரில் அவரை போலீசார் கைது செய்தனர்.
மேலும் செய்திகள் :
தமிழ்நாட்டை வஞ்சிக்கும் மோடி அரசு : செல்வப்பெருந்தகை
மகாத்மா காந்தியை திருமாவளவன் வார்த்தைகளால் கொன்று கொண்டிருக்கிறார் : தமிழிசை
வீட்டின் அருகே விளையாடிக் கொண்டிருந்த குழந்தை உயிரிழந்த சோக சம்பவம்..!
நலம் பெற பிரார்த்தனை செய்த அனைவருக்கும் ரஜினிகாந்த் நன்றி தெரிவிப்பு..!
நீதிபதி ஆர்.சுப்பிரமணியன் மீது புகார்..!
திருச்சியில் மீண்டும் வெடிகுண்டு மிரட்டல்!