சென்னையில் 6 நாட்களில் தங்கம் சவரனுக்கு ரூ.1,320 குறைந்தது

சென்னையில் 6 நாட்களில் தங்கத்தின் விலை சவரனுக்கு 1,320 ரூபாய் குறைந்துள்ளது. இன்று காலை நிலவரப்படி 22 காரட் ஆபரணத் தங்கம் கிராமுக்கு 18 ரூபாய் விலை குறைந்து, 3 ஆயிரத்து 764 ரூபாய்க்கும், ஒரு சவரன் 144 ரூபாய் விலை குறைந்து 30 ஆயிரத்து 112 ரூபாய்க்கும் விற்கப்படுகிறது.

 

முன்னதாக கடந்த எட்டாம் தேதி ஒரு சவரன் ஆபரணத் தங்கம் 31,432 என்ற புதிய உச்சத்தை தொட்டது. தொடர்ந்து வந்த நாட்களில் தங்கத்தின் விலை குறைந்து வந்த நிலையில் ஆறு நாட்களில் ஆயிரத்து 320 ரூபாய் விலை குறைந்துள்ளது. வெள்ளியின் விலையும், கிராமிற்கு 30 காசு விலை குறைந்து, ஒரு கிராம் 49 ரூபாய் 70 காசுக்கு விற்பனை செய்யப்படுகிறது.


Leave a Reply