கன்னட பக்தர்கள் மீது தாக்குதல் : தமிழக எல்லையில் கன்னட அமைப்பினர் நூதன போராட்டம்

தமிழகம் வந்த கன்னட பக்தர்கள் தாக்கப்பட்டதாக தகவல் வெளியானதையடுத்து தமிழக, கர்நாடக எல்லையில் கன்னட அமைப்புகளை சேர்ந்த 50க்கும் மேற்பட்டோர் நூதன போராட்டத்தில் ஈடுபட்டனர். கர்நாடகாவில் இருந்து மேல்மருவத்தூர் கோவிலுக்கு திரளான பக்தர்கள் வந்து செல்கின்றனர்.

 

தமிழகம் வழியாக சபரிமலைக்கும் கன்னட பக்தர்கள் சென்று வருகின்றனர். அவ்வாறு கர்நாடகாவில் இருந்து தமிழகம் வந்த பக்தர்களின் கார் தாக்கப்பட்டதாகவும், பாதுகாப்புக்காக கர்நாடக பக்தர்கள் வந்த காரில் இருந்த கொடியை போலீசார் அகற்ற சென்றதாகவும் கூறப்படுகிறது.

இதனை கண்டிக்கும் வகையில் தமிழக, கர்நாடக எல்லையான ஜுஜுவாடியில் திரண்ட கன்னட அமைப்பினர் பேருந்து மற்றும் வாகனங்களை நிறுத்தி ரோஜா பூ கொடுத்து நூதன போராட்டம் நடத்தினர். சண்டையிட விரும்பவில்லை என்றாலும் அதற்கும் தயாராக இருப்பதாகவும் அவர்கள் தெரிவித்தனர். போராட்டத்தில் ஈடுபட்டவர்களை அம்மாநில போலீசார் கைது செய்தனர்.


Leave a Reply