நடிகர் ரஜினிகாந்த் நடித்துள்ள தர்பார் படம் வரும் 9ஆம் தேதி வெளியாகும் போது சேலத்தில் ஹெலிகாப்டர் மூலம் மலர்தூவ அனுமதி வழங்க கோரி ரஜினி ரசிகர்கள் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்துள்ளனர்.
சேலம் புதிய பேருந்து நிலையம் அருகே உள்ள திரையரங்கில் திரைப்படம் வெளியாகும் ஒன்பதாம் தேதி என்று ரசிகர்களை வரவேற்கும் விதமாகவும், படம் வெற்றியடைய வாழ்த்து தெரிவித்தும் ஹெலிகாப்டர் மூலம் மலர்களை தூவி வாழ்த்து தெரிவிக்க சேலத்தை சேர்ந்த ரஜினி ரசிகர்கள் முடிவு செய்துள்ளனர்.
இதற்கு அனுமதி கோரி சேலம் ரசிகர்கள் மாவட்ட ஆட்சியரை சந்தித்து மனு அளித்துள்ளனர். இந்த மனு வருவாய் கோட்டாட்சியர் பார்வைக்கு அனுப்பப்பட்டு தற்போது வட்டாட்சியரின் மேற்பார்வையில் இருந்து வருகிறது.