காயத்திற்கு தையல் போட்ட துப்புரவு தொழிலாளி!

அறந்தாங்கி அரசு மருத்துவமனையில் விபத்தில் காயமடைந்தவருக்கு துப்புரவு தொழிலாளி தையல் போட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி அருகே கிராமத்தை சேர்ந்த பார்த்திபன் என்பவருக்கு விபத்தில் காயம் ஏற்பட்டுள்ளது.

 

இதனையடுத்து அவர் சிகிச்சைக்காக அறந்தாங்கி அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார். தாடையில் படுகாயமடைந்த பார்த்திபனுக்கு மருத்துவமனையில் துப்புரவு தொழிலாளி ஒருவர் கையில் போட்டுள்ளார்.

 

காயம் அடைந்து கிடந்த அவருக்கு சிகிச்சை அளிக்க மருத்துவர்களோ அல்லது செவிலியர்களோ வராமல் துப்புரவு தொழிலாளி வந்து தையல் போட்டது காயமடைந்தவரின் உறவினர்கள் மற்றும் பிற நோயாளிகள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. மேலும் அந்த நேரத்தில் மருத்துவமனையில் இல்லாத மருத்துவரின் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை வைத்துள்ளனர்.


Leave a Reply