இளம் கிரிக்கெட் வீரர்களுக்கு தென்னாப்ரிக்க முன்னாள் வீரர் ஜான்டி ரோட்ஸ் பயிற்சி

சேலத்தில் இளம் கிரிக்கெட் வீரர்களுக்கு தென்னாப்பிரிக்க முன்னாள் வீரர் ஜான்டி ரோட்ஸ் பயிற்சி அளித்து வருகிறார். சேலம் க்ரீன் ட்ரீ கிரிக்கெட் அகாடமி சார்பில் இளம் கிரிக்கெட் வீரர்களுக்கு பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது.

 

தென்னிந்தியாவில் உள்ள மாநிலங்களை சேர்ந்த 50 இளம் கிரிக்கெட் வீரர்கள் இதில் பங்கேற்றுள்ளனர். சேலம் உடையாப்பட்டி கந்தாஸ்ரமம் அருகே உள்ள தனியார் கிரிக்கெட் மைதானத்தில் மூன்று நாட்களுக்கு ஜான்டி ரோட்ஸ் பயிற்சி எடுக்கிறார். குறிப்பாக பீல்டிங்கில் உள்ள நுணுக்கங்கள் பயிற்றுவிக்கப்படுகிறது.


Leave a Reply