ஐஎன்எக்ஸ் மீடியா வழக்கில் அமலாக்கத் துறையால் கைது செய்யப்பட்டுள்ள ப.சிதம்பரத்தின் நீதிமன்ற காவலை வரும் 27ம் தேதி வரை டெல்லி சிபிஐ சிறப்பு நீதிமன்றம் நீட்டித்து உத்தரவிட்டுள்ளது. திகார் சிறையில் உள்ள ப சிதம்பரம் காணொளி மூலம் நீதிபதி முன் ஆஜர்படுத்தப்பட்டார்.
அவரது உடல்நிலையை கருத்தில் கொண்டு டெல்லி நீதிமன்றத்திற்கு அழைத்து வரப்படவில்லை. விசாரணையின்போது ப.சிதம்பரத்தின் காவலை மேலும் 14 நாட்களுக்கு நீடிக்க அமலாக்கத்துறை சார்பில் வாதிடப்பட்டது.
அதனை ஏற்ற நீதிபதி அஜய்குமார் சிதம்பரத்தின் காவலை வரும் 27ஆம் தேதி வரை நீட்டித்து உத்தரவிட்டார். ஜாமீன் கோரி சிதம்பரம் தாக்கல் செய்துள்ள மனு மீதான தீர்ப்பு இந்த வாரத்தில் வெளியாகலாம் என கூறப்படுகிறது.
மேலும் செய்திகள் :
1,170 சிறப்பு பஸ்கள் இயக்கம்..!
கருப்பு நிற செய்தி.. காஷ்மீர் செய்தித்தாள்கள் எதிர்ப்பு..!
மயோனைஸுக்கு ஓராண்டு தடை - தமிழ்நாடு அரசு உத்தரவு
முப்படை தளபதிகளுடன் மோடி ஆலோசனை: பதில் தாக்குதல்
நான் ஏன் இவ்வளவு மோசமாக நடித்திருக்கிறேன்.. தனது நடிப்பு குறித்து பேசிய சமந்தா..!
பஹல்காமில் சுற்றுலா பயணிகளை துப்பாக்கியால் சுட்டுக்கொன்றது ஏன்?