--- --:--:-- --

மண்டபம் அருகே ரூ.1 லட்சம் கள்ள நோட்டுகளுடன் இலங்கை அகதி கைது!

14

இலங்கை மன்னார் மாவட்டம் பதினாறாம்கட்டை சித்திரை குமார் மகன் முரளிதரன் (எ) அருண் (24). அகதியாக தமிழகம் வந்த அருண், திருப்பூர் மாவட்டம் அவிநாசி அகதிகள் முகாமில் தங்கியுள்ளார்.இராமநாதபுரம் மாவட்டம் மண்டபம் அகதிகள் முகாமில் தங்கியுள்ள அவரது உறவினரை சந்திக்க இன்று காலை வந்த இவர், மண்டபம் அருகே சுடுகாடு பகுதியில் உள்ள குடிநீர் தொட்டி அருகே சந்தேகத்திற்கு இடமாக நின்றார்.

 

அவரது நடவடிக்கையில் சந்தேகமடைந்த கியூ பிரிவு போலீசார் , அருணை பிடித்து விசாரித்தனர். சோதனையில் அவரிடம் இருந்த ரூ. 1லட்சம் கள்ள நோட்டுகளை பறிமுதல் செய்தனர்.

 

இதையடுத்து அருணை கைது செய்த கியூ பிரிவு போலீசார் மேலும் விசாரணைக்காக இராமநாதபுரம் கேணிக்கரை போலீஸ் ஸ்டேஷன் அழைத்து சென்றனர். அங்கு அவரிடம் இராமநாதபுரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் வருண்குமார் விசாரித்தார்.மேலும் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர் என்று கூறப்படுகிறது.

📱 Share on WhatsApp 𝕏 Share on X

Leave a Reply

Right Menu Icon