சேலம் அருகே கணவனை கண்டித்து அவரது மனைவியை 100 அடி உயர செல்போன் கோபுரத்தில் ஏறி போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சேலம் போடினாயக்கண்பட்டி சோலம்பள்ளம் பகுதியை சேர்ந்தவர் சேகர் என்பவரது மகள் அலமேலு. சேகருக்கும் அலமேலுவிற்கும் அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளதாக கூறப்படுகிறது.
அலமேலுவின் நடவடிக்கைகளை சேகரும் அவருடைய மகனும் கண்டித்ததாக கூறப்படுகிறது. இதனால் அலமேலுவிற்கும் அவரது கணவருக்கும் இடையே தகராறு முற்றியுள்ளது. இந்நிலையில் உடல் முழுவதும் மண்ணெண்ணையை ஊற்றிக் கொண்டு அலமேலு போடினாயக்கண்பட்டி பத்ரகாளியம்மன் கோவில் அருகே உள்ள 100 அடி உயர செல்போன் டவர் மீது ஏறி போராட்டத்தில் ஈடுபட்டார்.
தகவலறிந்து விரைந்து சென்ற சூரமங்கலம் காவல்துறையினர் அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். ஆனால் அலமேலு சமாதானம் அடையாதயதையடுத்து தீயணைப்பு வீரர்கள் உதவியோடு அவர் கயிறு கட்டி பத்திரமாக இறக்கப்பட்டார். பிறகு ஆம்புலன்ஸ் மூலம் சேலம் அரசு பொது மருத்துவமனைக்கு அவர் அழைத்து செல்லப்பட்டார்.
பெண் ஒருவர் செல்போன் டவர் மீது ஏறி போராட்டத்தில் ஈடுபட்டதால் அந்த பகுதியில் அதிகளவில் மக்கள் கூடி பெரும் பரபரப்பு ஏற்பட்டது.