குடிசை இல்லா முதல் மாநிலமாக தமிழகம் உருவாகும் : எடப்பாடி பழனிசாமி
நாட்டிலேயே குடிசை இல்லாத முதல் மாநிலமாக தமிழ்நாட்டை உருவாக்க அதிமுக அரசு பாடுபட்டு வருவதாக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.
முதலமைச்சரின் சிறப்பு குறை தீர் கூட்டங்களில் தரப்பட்ட கோரிக்கை மனுக்களின் கீழ் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா சேலம் மாவட்டம் கொங்கணாபுரத்தில் நடைபெற்றது. விழாவில் 258 கோடி ரூபாய் மதிப்பில் நிறைவேற்றப்பட்டுள்ள பல்வேறு திட்டங்களை முதலமைச்சர் திறந்து வைத்தார்.
பின்னர் உரையாற்றிய எடப்பாடி பழனிசாமி சிறப்பு குறை தீர் கூட்டங்களில் பொதுமக்களிடமிருந்து பெறப்பட்டு நிராகரிக்கப்பட்ட மனுக்களை மீண்டும் ஆய்வு செய்ய உத்தரவிடப்பட்டு இருப்பதாக கூறினார். மேலும் ஒரு லட்சம் ரூபாய் மதிப்புள்ள சொத்துக்கள் வைத்திருப்போருக்கும் முதியோர் உதவித்தொகை வழங்கப்படும் என்றும் முதலமைச்சர் கூறினார்.
தண்ணீர் பஞ்சமே இல்லாத நிலையை உருவாக்க அதிமுக அரசு லட்சியம் கொண்டிருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.
📱 Share on WhatsApp 𝕏 Share on X




