மின்சாரம் பாய்ந்து இருவர் உயிரிழப்பு – பொதுமக்கள் சாலைமறியல் – போலீஸ் குவிப்பு !!!

கோவை ஜீவா நகரில் ஆக்கிரமிப்பு வீட்டில் இருந்து பொருட்களை எடுத்துக்கொண்டு இருக்கும் போது மின்சாரம் பாய்ந்து இருவர் உயிரிழப்பு – பொதுமக்கள் சாலைமறியல் – போலீஸ் குவிப்பு !!!

 

கோவை – மேட்டுப்பாளையம் சாலை சாய்பாபா காலனி அருகே உள்ள ஜீவா நகர் பகுதியில் ஆக்கிரமிப்புகளை அகற்றும் பணி இன்று காலையில் இருந்து நடைபெற்று வருகிறது.இந்த ஜீவாநகர் பகுதியில் சுமார் 250க்கும் மேற்பட்ட வீடுகள் உள்ளன.இந்த வீடுகள் அனைத்தும் 35 வருடங்களுக்கு மேலாக இதே பகுதியில் குடியிருந்து வருபவர்கள் அனுமதி மீறி ஆக்கிரமிப்புப் பகுதிகளில் வீடுகளை கட்டி வாழ்ந்து வந்த பொதுமக்களை கடந்த சில மாதங்களாகவே மாநகராட்சி அதிகாரிகள் எச்சரிக்கை நோட்டீஸ் கொடுத்து நேரடியாக வந்து வீடுகளை காலி செய்ய சொல்லி அறிவுறுத்தியும் அவர்கள் காலி செய்யவில்லை.

இந்த காரணத்தினால் இன்று காலை அதிரடியாக மாநகராட்சி அதிகாரிகள் ஆக்கிரமிப்புகளை அகற்றும் பணியில் ஈடுபட்டனர்.இன்று மாலை சுமார் 5 மணிக்கு மேல் உறவினர் வீடுகளில் உள்ள பொருட்களை சுத்தம் செய்ய வந்த இரண்டு இளைஞர்கள் மேலே சென்ற மின்சார கம்பி தாக்கியதில் சம்பவ இடத்திலேயே பலியாகினர். அதுமட்டுமல்லாமல் இன்று மாலை நேர பகுதிகளில் லேசான சாரல் மழை பெய்து வந்த நிலையில் இவர்கள் வீட்டில் உள்ள பொருட்களை எடுத்து வைக்கும் போது மின்சாரம் தாக்கி இறந்துள்ளனர்.

 

இதனால் ஆத்திரமடைந்த அப்பகுதி மக்கள் சாலை மறியலில் ஈடுபட்ட அதைத்தொடர்ந்து அப்பகுதியில் காவல்துறையினர் குவிக்கப்பட்டுள்ளனர். இறந்த இருவரின் உடலும் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது. இறந்த இருவரின் பெயர் ஒன்று விஷ்ணு இரண்டு ஜெயராம்.மின்சாரம் தாக்கி இருவர் உயிரிழந்த சம்பவம் கோவையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


Leave a Reply