திருவாடானையிள் உள்ள மிகவும் பழமைவாய்ந்த மங்களநாதன் குளத்தின் ஒரு பக்க சுவர் இடிந்து விழுந்து சேதம்அடைந்துவிட்டது. ராமநாதபுரம் மாவட்டம், திருவாடானை தாலுகா, திருவாடானையில் பல நூற்றாண்டுகளுக்கு முன்பு மங்களநாதன் குளம் சுற்றுசுவர் அமைத்து கட்டப்பட்டு மக்களின் பயன்பாட்டில் இருந்து வந்தது. இந்த குளத்தில் நீர் நிரம்பினால் திருவாடானை பகுதிகளில் நிலத்தடி நீர் கணிசமாக உயரும் அளவிற்கு பல நூற்றாண்டுகளுக்கு முன்பே கணித்து கட்டப்பட்ட குளம் ஆகும்.

இந்த குளத்தில் நீர் பெருகும் காலத்தில் ஆண்கள் மட்டுமே குளிக்க பயன்படுத்திய குளம். இந்த குளத்தின் சுவர் சுண்ணாம்பு கலவையால் சுட்ட செங்கல் மற்றும் செம்பிரான் கல் கொண்டு மிகவும் நேர்த்தியாக கட்டப்பட்டது. தற்பொழுது இந்த குளத்தினை சீர் அமைப்பதே கடினமான ஒன்றாகும். சுவர் இடிந்து விழுவதற்கு முன்பே ஊராட்சி ஒன்றிய அலுவலர்களிடம் சமூக ஆர்வளர்கள் ஆபத்தான நிலை பற்றி எடுத்து கூறியும் அதிகாரிகள் கண்டுகொள்ளவில்லை.

அதிகாரிகளின் அலட்சியத்தால் தற்பொழுது இந்த பழமைவாய்ந்த குளத்தின மேற்கு புற சுவர் இடிந்து விழுந்து சேதமடைந்துவிட்டது. அரசு குடி மராமத்து என்று எவ்வளவோ செலவு செய்து வரும் நிலையில் இதை பாதுகாக்க முட்டு சுவர் கட்டியிருந்தாலே போதும் இது போன்ற சேதம் ஏற்பட்டிருக்காது என்று பொது மக்கள் தெரிவித்தார்கள்.






