விக்கிரவாண்டி இடைத்தேர்தல்: திமுக வேட்பாளராக நா.புகழேந்தி அறிவிப்பு

விக்ரவாண்டி இடைத்தேர்தலில் திமுக வேட்பாளர் அதனால் புகழேந்தி அறிவிக்கப்பட்டுள்ளார். விக்ரவாண்டி திமுக வேட்பாளர் நான் புகழேந்திக்கு வயது 66. அத்தியூர் திருவாதி கிராமத்தை சேர்ந்தவர் விவசாயம் செய்து வருகிறார். புகழேந்தி பத்தாம் வகுப்பு வரை படித்துள்ளார் அவருக்கு ஒரு மகனும் மூன்று மகள்களும் இருக்கிறார்கள். சிறுவயது முதலே திமுகவில் உள்ள புகழேந்தி 1973 ஆம் ஆண்டு கட்சியின் கிளை செயலாளர் பதவி வகித்தவர்.

 

1986 ஆம் ஆண்டு திமுக பொதுக்குழு உறுப்பினர் 1990-ல் ஒன்றிய பொறுப்பாளர் 1992 முதல் 1997 வரை ஒன்றிய செயலாளர் ஆகிய கட்சி பதவிகளை வகித்தவர் புகழேந்தி. 1997ஆம் ஆண்டு திமுக தலைமை கழக செயற்குழு உறுப்பினர் 2009 ஆம் ஆண்டு விழுப்புரம் மாவட்டம் பொருளாளர் பதவியில் வகித்துள்ளார். தற்போது விழுப்புரம் மத்திய மாவட்ட பொருளாளராக புகழேந்தி உள்ளார் கட்சிப் பொறுப்புகள் மட்டுமல்லாமல் ஆத்தூர் திருவாசி ஊராட்சி மன்ற தலைவர் கோலியனூர் ஒன்றிய பெருந்தலைவர் ஆகவும் புகழேந்தி இருந்துள்ளார்.

 

1987 ஆம் ஆண்டு சட்ட நகல் எரிப்புப் 1991 ஆம் ஆண்டு இலவச மின்சாரம் ரத்து செய்யப்பட்டதற்கு எதிராக போராட்டத்தில் பங்கேற்று சிறைக்கு சென்றவர் புகழேந்தி. 2016ஆம் ஆண்டு திமுக சார்பாக விக்கிரவாண்டி தொகுதியில் போட்டியிட விருப்பம் தெரிவித்திருந்த நிலையில் தற்போது அவருக்கு வாய்ப்பு தரப்பட்டுள்ளது.


Leave a Reply