டிஎஸ்பி விஷ்ணுபிரியா தற்கொலை வழக்கில் கோவை தலைமை குற்றவியல் நீதிமன்றத்தில் இரண்டாவது முறையாக சிபிஐ அறிக்கை தாக்கல் செய்துள்ளது. அதில் விஷ்ணுபிரியா தற்கொலைக்கு யாருடைய தூண்டுதலும் இல்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது. நாமக்கல் மாவட்டத்தில் பணியாற்றி வந்த விஷ்ணுபிரியா கடந்த 2015 ஆம் ஆண்டு செப்டம்பர் 18-ல் அவருடைய முகாமில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.
இது தொடர்பாக சிபிஐ இந்த வழக்கை விசாரித்து வந்தது உயரதிகாரிகளின் அழுத்தம் காரணமாக விஷ்ணுபிரியா தற்கொலை செய்து கொண்டதாக புகார் எழுந்த நிலையில் கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் இது தொடர்பாக முதல் அறிக்கையை சிபிஐ தாக்கல் செய்திருந்தது. அந்த அறிக்கையில் யாருடைய தூண்டுதலும் இல்லை தற்கொலைதான் என சிபிஐ தாக்கல் செய்திருந்தது.
அந்த அறிக்கைக்கு தான் எதிர்ப்பு தெரிவித்து விஷ்ணு பிரியாவின் தந்தை கோவை தலைமை குற்றவியல் நீதிமன்றத்தில் மனு ஒன்றை தாக்கல் செய்திருந்தார். அந்த மனுவில் சிபிஐ விசாரணை முழுமையாக இல்லை மீண்டும் விசாரிக்க கோரி உத்தரவிடக்கோரி தான் அந்த மனு தாக்கல் செய்யப்பட்டிருந்தது. இந்த மனு கிட்டத்தட்ட ஆறு மாதங்கள் நடைபெற்றது. இந்த மனு மீதான தீர்ப்பு கடந்த டிசம்பர் மாதம் நடைபெற்றது. அப்போது கோவை தலைமை குற்றவியல் நீதிமன்றம் வழக்கில் மீண்டும் விசாரிக்க கோரி சிபிஐ க்கு உத்தரவிட்டிருந்தது.
மேலும் 6 மாதத்திற்குள் அறிக்கை தாக்கல் செய்யவும் உத்தரவிட்டு இருந்தது. தற்போது சிபிஐ விசாரணை நடத்தி அறிக்கை தாக்கல் செய்துள்ளது. அந்த அறிக்கையில் டிஎஸ்பி விஷ்ணு ப்ரியாவின் தற்கொலை யாருடைய தூண்டுதலும் இல்லை என்பதையும் அதனால் தங்களுடைய அறிக்கையை நீதிமன்றம் ஏற்றுக்கொள்ள வேண்டும் என்பதையும் தெளிவாக குறிப்பிட்டுள்ளது.