லாரி ஓட்டுனருக்கு 1 லட்சத்து 41 ஆயிரம் ரூபாய் அபராதம் ! கடும் எதிர்ப்பு!

அனுமதிக்கப்பட்டதை விட கூடுதல் சுமை ஏற்றி எதற்காக சரக்கு லாரி ஓட்டுனருக்கு ஒரு லட்சத்து 41 ஆயிரம் ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டு இருக்கிறது. புதிய மோட்டார் வாகன சட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து டெல்லியில் அமைச்சர் நிதின்கட்கரி வீட்டின் முன்பு காங்கிரஸ் கட்சியினர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

 

புதிய மோட்டார் வாகன சட்டத்தின்படி செல்போன் பேசிக்கொண்டே வாகனம் ஓட்டுவது ,ஹெல்மெட் அணியாமல் இருப்பது, வாகனம் உரிமம் இல்லாமல் இருப்பது, குடித்துவிட்டு வாகனம் ஓட்டுவது உள்ளிட்ட குற்றங்களுக்கு அபராதம் கடுமையாக உயர்த்தப்பட்டுள்ளது. இதனால் சாலை விதிகளை மீறிய வாகன ஓட்டிகள் முன்பை விட பத்து மடங்கு அதிகமாக பல ஆயிரங்களில் லட்சங்களை அபராதம் செலுத்தி வருகின்றனர்.

 

இந்நிலையில் ராஜஸ்தான் மாநிலத்தில் அதிக லோடு ஏற்றிய லாரி ஓட்டுனருக்கு ஒரு லட்சத்து 40 ஆயிரம் ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. புதிய மோட்டார் வாகன சட்டம் அமல்படுத்தப்பட்ட பின்பு நாட்டிலேயே அதிக அளவில் விதிக்கப்படும் அபராத தொகையாக இது கருதப்படுகிறது. இதனிடையே இந்த புதிய மோட்டார் வாகன சட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து டெல்லியில் உள்ள மத்திய சாலை போக்குவரத்து துறை அமைச்சர் நிதின் கட்கரி இன் வீட்டின் முன்பு இளைஞர் காங்கிரஸ் கட்சியினர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இரு சக்கர வாகனம் ஒன்றை தூக்கி பிடித்தவாறு கண்டன கோஷங்களை எழுப்பிய போராட்டக்காரர்கள் புதிய மோட்டார் வாகன சட்டத்தை திரும்பப் பெற வேண்டும் என வலியுறுத்தினார். இதன் காரணமாக நிதின்கட்கரி வீடு அமைந்துள்ள பகுதி பரபரப்பான சூழல் காணப்பட்டது. அதிகரிக்கும் விபத்துகளையும் உயிரிழப்புகளையும் தடுப்பதற்காகவே புதிய மோட்டார் வாகன சட்டம் கொண்டுவரப்பட்டுள்ளதாக மத்திய அமைச்சர் நிதின் கட்கரி தெரிவித்துளார்.

 

அரசின் வருவாயை பெருக்குவதற்காக இந்த நடவடிக்கையை மேற்கொள்ள வில்லை என விளக்கமளித்துள்ளார். புதிய மோட்டார் வாகன சட்டத்தின்படி போக்குவரத்து விதி மீறலுக்கான அபராத தொகையை மாநில அரசுகள் குறைப்பதால் எந்த பிரச்சனையும் இல்லை என்று தெரிவித்துள்ளார்.


Leave a Reply