நாளை சென்னை திரும்புகிறார் எடப்பாடி பழனிசாமி!

தொழில் முதலீடுகளை ஈர்ப்பதற்காக வெளிநாடுகளுக்கு சென்றுள்ள முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி நாளை அதிகாலை சென்னை திரும்புகிறார். அரசு முறை பயணமாக இங்கிலாந்து, அமெரிக்கா மற்றும் துபாய் நாடுகளுக்கு முதலமைச்சர் பழனிசாமி சென்றுள்ளார்.

 

கடந்த மாதம் இருபத்தி எட்டாம் தேதி தனது பயணத்தை தொடங்கிய முதலமைச்சர் முதலில் இங்கிலாந்துக்கும் தொடர்ந்து அமெரிக்காவுக்கும் சென்றார். அங்கு சென்று தொழில் முதலீட்டாளர்களுக்கான தமிழ் அமைப்புகளைச் சேர்ந்த பிரதிநிதிகளையும் சந்தித்து தமிழ்நாட்டில் தொழில் தொடங்குவதற்கு சாதகமாக உள்ள சூழலை எடுத்துரைத்த முதலமைச்சர் அதிகளவில் முதலீடு செய்ய வருமாறு அழைப்பு விடுத்தார்.

 

மேலும் பல்வேறு தொழில் நிறுவனங்களில் செயல்படுத்தப்பட்டு வரும் புதிய தொழில்நுட்பங்களையும் முதலமைச்சர் பார்வையிட்டு அவற்றில் தமிழ்நாட்டில் செயல்படுத்தக் கூடிய சாத்தியக்கூறுகள் குறித்தும் கேட்டறிந்தார். அமெரிக்க பயணத்தை முடித்துக்கொண்டு துபாய் சென்ற முதலமைச்சர் அங்கு சிறப்பான வரவேற்பு அவருக்கு கொடுக்கப்பட்டது.

 

அந்நாட்டு தொழிலதிபர்களை சந்தித்து தொழில் முதலீடுகள் குறித்து ஆலோசனை நடத்துகிறார். முதலமைச்சர் தனது 13 நாள் பயணத்தை நிறைவு செய்துவிட்டு நாளை அதிகாலை இரண்டு 40 மணிக்கு சென்னை திரும்ப இருப்பதாக தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


Leave a Reply