அமெரிக்காவிலிருந்து துபாய் செல்லும் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி!

அரசுமுறைப் பயணமாக அமெரிக்கா சென்ற முதலமைச்சர் பழனிசாமி லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் கழிவுநீரை மறுசுழற்சி செய்யும் மையத்தை ஆய்வு செய்தார். வீடுகளில் இருந்து வரும் கழிவு நீரை பிரித்து எடுத்து சுத்தமாக மீண்டும் வீடுகளுக்கு அனுப்பும் முறையை அந்த மையத்தின் அதிகாரிகள் முதலமைச்சரிடம் எடுத்துரைத்தனர்.

 

பலகட்ட சுத்திகரிப்புக்கு பிறகு அந்த நீர் கழிவறை பயன்பாடு விவசாயம் உள்ளிட்டவர்களுக்கு எவ்வாறு பயன்படுத்தப்படுகிறது என்பது பற்றி அதிகாரிகள் விளக்கினர். ஒரு நிமிடத்தில் நான்காயிரம் கேலன் தண்ணீர் இந்த மையத்தில் மறுசுழற்சி செய்யப்படுகிறது.

 

அமெரிக்க பயணத்தை முடித்துக்கொண்டு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி நாளை துபாய் சென்றடைகிறார். இரண்டு நாட்கள் துபாயில் இருக்கும் அவர் தொழிலதிபர்களை சந்திக்கிறார். அதனை தொடர்ந்து வரும். 10 ஆம் தேதி சென்னை வருகிறார்.


Leave a Reply